சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
சீர்காழி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நீர்வளத்துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நீர்வளத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர் பங்கேற்ற பி மற்றும் சி பாசன வாய்க்கால்கள் தூர்வாறுவது மற்றும் வடிவாய்க்கால்கள் சீரமைப்பது தொடர்பான விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சீர்காழி, கொள்ளிடம் வட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல்வேறு விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
12 மணி வரை இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் உயர் அதிகாரிகள் யாரும் பங்கேற்காத நிலையில் நீர்வளத்துறை மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாறுதல் தொடர்பான எங்களது கோரிக்கைகளை யாரிடம் கூறுவது என விவசாயிகள் அதிருப்தி அடைந்து கூட்டத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்தனர்.
தொடர்ந்து நீர்வளத்துறைக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பியதோடு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு கூட்டத்தை மறுத்தேதியில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்று நடத்திட அதில் சீர்காழி கோட்டாட்சியரும் பங்கேற்றிடவும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கூட்டத்தை புறக்கணித்து வெளியேறியதால் பரபரப்பு நிலவியது.
No comments