Breaking News

புதுச்சேரியில் மீனவ கிராமம் அருகே இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பயிற்சி மையத்திற்கு நிலம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரியில் மீனவ கிராமம் அருகே இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பயிற்சி மையத்திற்கு நிலம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி  மாநிலம் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட நரம்பை மீனவ கிராமம் அருகே,இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் பயிற்சி மையம் கட்ட கடந்த 2003ஆம் ஆண்டு 88 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து தற்காலிகமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் அந்தப் பகுதியில் பயிற்சி மையம் கட்டுவதற்கு ஆய்வு செய்ய காவல்துறை உயர் அதிகாரிகள் அங்கு வருவதாக  இன்று தகவல் வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒன்று திரண்டு கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து போராட்ட களத்திற்கு வந்த தொகுதி என்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி காந்தனை மீனவ மக்கள் சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அந்தப் பகுதியில் பயிற்சி மையம் கொண்டு வந்தால் மீனவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் என்றும், போலீசாரின் கட்டுப்பாட்டில் கிராமம் வர வாய்ப்புள்ளதால் இந்தப் பகுதியில் போலீஸ் பயிற்சி மையம் கட்ட அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.இதனால் அப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!