மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொடியேற்ற விழா.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அதன் தலைவர் நடிகர் விஜய் சமீபத்தில் அறிமுகம் செய்து கட்சிக் கொள்கை பாடல் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடியை நிர்வாகிகள் ஏற்றி வருகின்றனர். அதன் ஒரு நிகழ்வாக மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் கொடி இன்று ஏற்றப்பட்டது. தரங்கம்பாடி தாலுகா அனந்தமங்கலம் கிராமத்தில் ஒன்றிய தலைவர் ராஜா செயலாளர் வசந்த் தலைமையில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் மாவட்ட தலைவர் குட்டி கோபி கலந்து கொண்டு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்றனர்.
முன்னதாக ஆக்கூரில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கினர். திருக்கடையூர் கடைவீதியில் இருந்து சுமார் 100 க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கட்சி கொடியுடன் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்திலும், பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோவிலும் கட்சி கொடியுடன் ஆரவாரத்துடன் ஊர்வலமாக உற்சாக கோஷங்களை எழுப்பி சென்று பட்டாசுகள் வெடித்து கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் கட்சி கொடியேற்றப்பட்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்குவதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகளை மாவட்டத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணி ஒன்றியம் பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments