Breaking News

திருச்செந்தூர் கடலில் நீராடும் பக்தர்களின் வசதிக்காக முதலுதவி மையம் திறப்பு.


கடலில் நீராடும் பக்தர்கள் நலன் கருதி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் திரு அருள்முருகன் அவர்கள் உத்தரவின் பெயரிலும்  திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் அவர்கள் நேரடி பார்வையிலும். அருள்மிகு  சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கடற்கரையில்  ஒரு வார காலமாக அதிக அளவில் அலுவை சொறி வகைச் சார்ந்த ஜெல்லி மீன்கள் கடற்கரையில் புனித நீராடும் பக்தர்களுக்கு  உடலில் அரிப்பு ஏற்படுவதால் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் இணை ஆணையர் திரு ஞானசேகரன் அவர்களின் உத்தரவுப்படி மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம் அவர்கள் தலைமையில்  மீன்வளத்துறை ஆய்வாளர் திரு ஜெகன் அவர்கள் மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் மீன்வளத் துறை மேற்பார்வையாளர் திரு ஜெயக்குமார் திரு தேசிங்குராஜா மாயக்கண்ணன் சிவராமகிருஷ்ணன் சுகுமார் மகாராஜன்  கடற்கரை பணியாளர் மூலம்    முதலுதவி சிகிச்சை மையத்தில்  வைத்து பக்தர்களுக்கு சிகிச்சை  அளிக்கப்பட்டது.

தற்போது இன்று மதியம் மத்திய கடல் மீன் ஆராய்ச்சியாளர் திரு ரஞ்சித் அவர்கள் தலைமையில் உதவி ஆராய்ச்சியாளர் பால்பாண்டி மற்றும் அபி ராஜ் அவர்கள் ஜெல்லி மீன்களை நேரடியாக ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக திருக்கோவில் அதிகாரி  Aso ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் சிவராஜா கணபதி சுதாகர் மகாராஜா மாரிமுத்து  ராமர் ஆகியோரின் பணியிலும் ஜெல்லி மீன்கள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. 


- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ. முரேஷ்

No comments

Copying is disabled on this page!