திருத்தணியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு. 2 குழந்தைகளுடன் தீயில் சிக்கிக் கொண்ட கணவன் மனைவி. ஒரு வயது குழந்தை பலி.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் முன் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்கள் மர்மமான முறையில் தீப்பற்றிக் கொண்டதில் பெட்ரோல் டேங்க் வெடித்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்து வீட்டை சுற்றி கரும் புகை சூழ்ந்து கொண்டது. அப்போது தரை தளத்தில் டைல்ஸ் பெரும் சத்தத்துடன் வெடிக்க தொடங்கியதால் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து பிரேம்குமார் அவரது மனைவி குழந்தைகளுடன் தப்பிக்க படிகள் வழியாக இறங்கி வந்த போது சூழ்ந்தைகள் உப்பட நான்கு பேரும் தீயில் சிக்கிக்கொண்டனர்.
அக்கம் பக்கத்தினர் அவர்களை காப்பாற்றி திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர் . தீ விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள், சைக்கிள் தையல் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், திருத்தணி டி.எஸ்.பி.கந்தன் இன்ஸ்பெக்டர் மதியரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நவிலன் என்ற ஒரு வயது குழந்தை சிகிச்சை பலனென்று இறந்தார்.
திருத்தணியில் நள்ளிரவில் வீட்டின் முன்பு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி ஒரு குழந்தைகள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களுக்கு தீவைத்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் குளிர்காலத்தில் வீட்டின் உரிமையாளர் மகேஷ், மனைவி குழந்தை மற்றும் தாயாருடன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து உள்ளார். அப்போது தீ கொழுந்து விட்டு தெரிந்து கொண்டு வீட்டை சுற்றி கரும்புகள் சிறந்த நிலையில் வெளியே சென்றார் உயிர் பிறக்க முடியாது என்று தெரிந்து கொண்டவர்.
வீட்டில் உள்ளே பின்புறம் சென்று ஒரு அரை தங்கி உள்ளனர். அப்போது தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் இருக்க உடனடியாக மின் ஊழியர்கள் மின்சாரம் நிறுத்தினார். பாதுகாப்பாக வீட்டில் இருந்த வீட்டின் உரிமையாளர் அவர்கள் குடும்பத்தினர் காயமின்றி உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
No comments