தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசத்துக்கு இடமளிக்காது என புதுச்சேரியில் நடைப்பெற்ற விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், ‘பாரத் சக்தி பாண்டி இலக்கியத் திருவிழா 2024’ கடந்த 21-ம் தேதி தொடங்கியது. தமிழக ஆளுநர் ஆ.என். ரவி தொடங்கி வைத்தார். 3 நாட்கள் நடைபெற்று வந்த இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து விழாவில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,நாட்டின் பொருளாதார வலிமையை அனைவரும் உணர்கின்றனர். அதனடிப்படையில் தான் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகி உள்ளார். தன்னுடைய அடிப்படை கட்டமைப்பில் இந்தியா உறுதியாக உள்ளது. அதன்படி தேசப் பாதுகாப்புக்கு பிரமர் முன்னுமை அளித்து வருகிறார்.நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமாக செலவிடப்படுகிறது. நமது நீ்ண்டகால அமைதிக்கு பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. அதனால் தேசத்தின் பாதுகாப்பில் மத்திய அரசு சமரசத்துக்கு இடமளிக்காது என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளி ஆசிரியை (தற்போது ஓய்வு ஆசிரியர்) சபீதா அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். அப்போது நிர்மலா சீதாராமன் ஆசிரியை காலில் விழுந்து ஆசி பெற்றார்.
No comments