தி.மு.க., - காங்., தங்களின் சமூக நீதிக்கு எதிரான செயலை மூடி மறைக்க தற்போதைய முதல்வர் மீது வீண் பழியை சுமத்துகின்றன என, அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில செயலாளர் அன்பழகன், தி.மு.க., துணை அமைப்பாளர் 10 சதவீத இடஒதுக்கீடு பிரச்னையில் பொய்யான தகவல்களை கூறி வருகிறார். இந்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தும் போது இந்தியாவில் எதிர்த்த ஒரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
புதுச்சேரியில் இந்த சட்டத்தை அப்போது தி.மு.க., காங்., கூட்டணி முதல்வராக இருந்த நாராயணசாமி அமல்படுத்தினார். இதை தி.மு.க.,வினர் மூடி மறைத்துவிட்டு அதிகாரிகள் அமல்படுத்தியதாக வசைபாடி வருகின்றனர். தி.மு.க.,வின் திசை திருப்பும் இந்த நாடகத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். தி.மு.க., காங்., தங்களின் சமூக நீதிக்கு எதிரான செயலை மூடி மறைக்க தற்போதைய முதல்வர் மீது வீண் பழியை சுமத்துகிறது என்றார்.
No comments