தூத்துக்குடி கண்ணா சில்க் 22ஆம் ஆண்டு தொடக்க விழாயொட்டி கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகில் உள்ள கண்ணா சில்க் ஜவுளி நிறுவனத்தின் 22ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து முழுமையான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கண்ணா சில்க் நிறுவன உரிமையாளர் முத்துவேல், பாலாஜி, ரகுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்ணா சில்க் பார்கிங் பகுதியில் நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் கார்த்திகேயன், ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையிலான குழுவினர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். அதில், கண்புரை நோயாளிகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, உள்ளவர்களுக்கு கண்ணா சில்க் சார்பாக இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
முகாமிற்கான ஏற்பாடுகளை கண்ணா சில்க் மேலாளர்கள் சுவேதா, துரை, சண்முகம் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை கந்தசாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
No comments