Breaking News

திமுக முன்னாள் அமைச்சர் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்தவர் க.சுந்தரம் (76). திமுகவை சேர்ந்தவரான க. சுந்தரம் கலைஞர் அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்தவர் க.சுந்தரம். 1989இல் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக கலைஞரால் நியமனம் செய்யப்பட்டார். 

தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் பொன்னேரி தொகுதியில் வெற்றி பெற்று பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அமைச்சராகவும் பதவி வகித்தவர் அண்மைக்காலமாக உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்த சூழலில் தற்பொழுது உடல்நல குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திமுக நிர்வாகிகள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!