Breaking News

புதுச்சேரியில் சமீப காலமாக கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பது அதிகரித்துள்ளது. இதன் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை.


காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி சார்பில் வருகின்ற ஏழாம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா (விநாயகர் ஊர்வலம்) ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில இந்து முன்னணி தலைவர் சுனில் குமார் தலைமை தாங்கினார். அப்போது விநாயகர் சிலை நிறுவுவது, அரசு அனுமதி பெறுவது, ஊர்வலம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் சுனில் குமார் "புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய உள்ளதாகவும் விநாயகர் திருவிழாவிற்கு ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார். சமீப காலமாக புதுச்சேரி மாநிலத்தில் கோவில் சொத்துக்களை அபகரிப்பதும் ஆக்கிரமிப்பதும் அதிகரித்துள்ளதாகவும் காரைக்கால் பார்வதி ஈஸ்வரன் கோயில் இடங்களை 60 பிளாட்டுக்களாக பிரித்து விற்க முயற்சி செய்திருப்பது கண்டனத்திற்குரியது எனவும் இதன் மீது அரசு தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் அவர் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கணேஷ்குமார், நகர தலைவர் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!