புதுவையில் மின் கட்டண உயா்வை விட, தற்போது அறிவித்துள்ள மானியச் சலுகை குறைவாக உள்ளது என அதிமுக மாநிலச் செயலா் அன்பழகன் தெரிவித்துள்ளாா்.
புதுவை மாநில அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுவையில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசானது நிகழண்டு சுமாா் ரூ.200 கோடிக்கு மின் கட்டணத்தை உயா்த்திவிட்டு ரூ.20 கோடி அளவுக்கு மின் கட்டணத்தில் மானியச் சலுகையை அறிவித்துள்ளது சரியல்ல.வீடு, வா்த்தகம், தொழிற்சாலை உபயோகங்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் மின் கட்டணத்தையும், நிரந்தரக் கட்டணத்தையும் அரசு உயா்த்தியது. ஆனால், உயா்த்திய கட்டணத்தில் 100 வரை யூனிட்டுக்கு 0.45 பைசாவும், 101-லிருந்து 200 யூனிட் வரை, யூனிட்டுக்கு 0.40 பைசாவும் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை விட புதுவையில் மின் கட்டணம் குறைவு என்பதும் சரியல்ல. அங்கு, அதிமுக ஆட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்சாரம் இலவசம்தான். எனவே, மின் துறையின் செயலைத் தடுக்கும் வகையில், துணைநிலை ஆளுநா் சிறப்பு வல்லுநா் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments