சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் முகுந்தகுமாரி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார் வரவேற்றார். வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் திருச்சி மண்டல வருமான வரித்துறை உதவி ஆணையர் ஸ்ரீதர் கலந்து கொண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி அடைய மாணவர்கள் எவ்வாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி விளக்கி கூறினார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புல பேராசிரியர் ஸ்ரீகாந்த்,வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர்கள் அன்பழகன், சுனிதா,வணிகவியல் துறை பேராசிரியர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். அனைத்து துறை சார்ந்த பேராசிரியர்கள்,ஆசிரியர்கள், அலுவலர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் முரளிகுமரன் நன்றி கூறினார்.
No comments