Breaking News

திருவள்ளூர் அருகே திடீரென அருந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த கறவை மாடு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய உரிமையாளர்.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்திற்கு உட்பட்ட கங்கடி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகினி இவர் அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் தனது கரவை மாட்டை மேச்சலுக்காக ஓட்டிச் சென்றபோது, திடீரென மேலே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மீன் கம்பி அறுந்து விழுந்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து கறவை மாடு நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிர்கிழந்தது இதில் அதிர்ஷ்டவசமாக மாட்டின் உரிமையாளர் ராகினி நூல் இழையில் உயிர் தப்பினார்.

இதுகுறித்து அப்பகுதி வாசிகள் அளித்த தகவலை தொடர்ந்து அங்கு மின்வாரிய ஊழியர்கள் வயல்வெளியில் அருந்தி கிடந்த உயர் அழுத்த மின் கம்பியை சீர் செய்தனர், மேலும் சம்பவம் தொடர்பாக சோழவரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!