Breaking News

சீர்காழியில் பல்பொருள் கடை நடத்தி வந்த முதியவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் உள்ளிட்ட மூவர் கைது.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பல்பொருள் கடை நடத்தி வந்த முதியவரை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் அவரது மகன் உள்ளிட்ட மூவரை போலீசார் சனிக்கிழமை இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.  சீர்காழி அருகே கோயில்பத்து பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர் முகமது ரஃபிக் (62). இவர் கோயில் பத்து மெயின் ரோட்டில் பல்பொருள் விற்பனை கடை வைத்துள்ளார். 

இவர் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடையிலேயே தங்கி இருந்து வருகிறாராம். இவர் கடந்த 20 ஆம் தேதி இரவு கடை வாசலில் மர்ம நபர்கள் முகமது ரஃபிக் கழுத்தை அறுத்து கொலை செய்ததில் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன், சப்.இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த முகமது ரபிக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொலை செய்த நபர்களை தேடி வந்தனர். 

இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட முகமது ரஃபிக் உடனான குடும்ப பிரச்சனையால் ஆத்திரமடைந்த மகன் முகமதுயூசுப் (22 )என்பவர் தனது நண்பர்களான கோவில்பத்து புது தெருவை சேர்ந்த கலைக்கண்ணன் மகன் சுபாஷ் ( 22 ) இதேபோல் தஞ்சாவூர் ஜலாவுதீன் மகன் பாண்டு என்கின்ற முகமது பாசித் (19)ஆகியோர் சேர்ந்து கடையில் இருந்த முகமது ரஃபிக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் கொலைக்கு பயன்படுத்திய அரிவாள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தந்தையை மகன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூவரையும் சீர்காழி போலீஸார் அழைத்துக் கொண்டு கொலை நடந்த இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியிலிருந்து பாசித் மற்றும் சுபாஷ் தப்ப முயன்று தடுமாறி கீழே விழுந்ததாகவும் இதில் சுபாஷ் மற்றும் பாசித் ஆகியோருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்ததனர்.

No comments

Copying is disabled on this page!