மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு, வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் கடுமை காட்டாமல் விரைவாக வழங்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்.
விவசாயிகள் நிறைந்த மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு, வங்கிகள் கல்விக்கடன் வழங்குவதில் கடுமை காட்டாமல் விரைவாக வழங்க வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் , 157 மாணவ மாணவிகளுக்கு 7 கோடியே 71 லட்சம் மதிப்பிலான உயர் கல்வி கடனை வழங்கி பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுரை.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் தேசிய வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் நடைபெற்றது.
முகாமில் மாணவ மாணவிகளின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல்வேறு வங்கிகள் சார்பில் கல்வி கடன் அரங்குகள் அமைக்கப்பட்டு கல்வி கடன் பெறுவது குறித்த வழிகாட்டுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
முகாமை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி துவக்கி வைத்து இந்த ஆண்டு இதுவரை தேர்வு செய்யப்பட்ட 157 மாணவ மாணவிகளுக்கு 7 கோடியே 71 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர்கல்வி கடனை வழங்கினார் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் மயிலாடுதுறை மாவட்டம் வேறு தொழில்கள் இல்லாத விவசாயப்பகுதிகள் அடங்கிய மாவட்டமாக உள்ளது.
இங்கு பயிலும் மாணவ மாணவிகள் நிதி நெருக்கடி காரணமாக உயர்கல்வியை தொடராமல் இருக்கக் கூடாது இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கடுமை காட்டாமல் தாராளமாக விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடியாக கல்விக்கடன் வழங்க வேண்டும் அப்பொழுது மயிலாடுதுறை மாவட்டம் உயர்கல்விகள் படித்த மாணவ மாணவிகள் நிறைந்த மாவட்டமாக மாறும் என்று பேசினார். நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
No comments