தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது சென்னை பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது சென்னை பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம். தன்மானம் தான் மனிதனுக்கு முக்கியம் தலைவர்களை அவதூறாக பேசுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும் அதிமுகவுடன் இணக்கம் குறித்து நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு பதில்
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலி தூத்துக்குடி விருதுநகர் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் இதற்காக அவர் ரயில் மூலம் சேலத்தில் இருந்து இன்று காலை திருநெல்வேலி வந்து சேர்ந்தார் திருநெல்வேலியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளிக்குள் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற நிலையில் அவர்களுடைய புகார் நீண்ட காத்திருப்பிற்கு பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது காவல்துறைக்கு சுதந்திரம் வழங்காததால் அவர்களால் உரிய நடவடிக்கை எடுக்க முடியவில்லை இது போன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
பள்ளியில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது கண்டனத்திற்குரியது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த நபர் அமைச்சர்களோடு புகைப்படம் எடுத்துள்ளார் அமைச்சர்களுடன் இருந்த நெருக்கம் காரணமாகவே அவருக்கு நிகழ்ச்சி பள்ளிகளில் நடைபெற அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னை பள்ளிகளில் ஆன்மீக நிகழ்ச்சி நடத்தியது குறித்து எடப்பாடி பழனிச்சாமி மேற்கண்டவாறு பேசினார்.
நாமக்கல் மாவட்டம் எருமையூர் பகுதியில் பள்ளி சுவற்றில் மனித மலம் பூசப்பட்டுள்ளது இச்சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது வேங்கைவயல் சம்பவத்திலேயே இன்றளவும் உண்மையை அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.
திறனற்ற அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது. மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் அங்கு பணிபுரியும் நபர் குற்றம் சாட்டியிருந்தார் அது குறித்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் குற்றம் சாட்டிய நபர் தற்போது நிறுவனத்தில் இருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 22 மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு அதில் 12 மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது வரும் பத்தாம் தேதி இந்த வழக்கு மீண்டும் வர உள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் மத்திய மாநில அரசுகள் விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுடைய மீன்பிடி படகுகளையும் திரும்பிப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வருகிற ஒன்பதாம் தேதி மீனவர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் அதற்கு முன்பாக விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் பயம் இல்லாமல் அந்த சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். மக்களை காக்க வேண்டிய காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ள நிலையில் மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே ஏற்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் துபாய் சிங்கப்பூர் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வந்ததாக கூறப்பட்டது எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது எத்தனை நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஏற்கனவே வெள்ளை அறிக்கை குறித்து கோரிக்கை வைத்த நிலையில் அவ்வாறு வெள்ளை அறிக்கை வெளியிட முடியாது என முதல்வர் தரப்பில் கூறப்பட்டது மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே அரசை வெள்ளை அறிக்கை கேட்டு வலியுறுத்துகிறோம்.
சென்னை கார்பந்தயம் நடத்தி மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது ஏற்கனவே கார் பந்தயம் நடத்த சென்னை இருங்காட்டுங்கோட்டையில் மைதானம் தனியாக உள்ளது அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்கப்படுவது இல்லை ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை தட்டுப்பாடு நிலவுகிறது இது போன்ற நிலை இருக்கும்போது விளையாட்டுத்துறை அமைச்சர் கஜானாவை காலி செய்து வருகிறார் என குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை இவர்கள் முறையாக செயல்படுத்தவில்லை பல்வேறு பணிகள் முடிவடையும் தருவாயில் இருந்த நிலையிலும் அதனை முழுமையாக முடிக்காமல் உள்ளனர்.ஆட்சி நிறைவடைய 19 மாத காலமே இருக்கும் நிலையில் இன்னமும் முந்தைய ஆட்சியை குறை சொல்லிக் கொண்டிருப்பது சரியல்ல.
No comments