Breaking News

திருவள்ளூர் அருகே ரூ.2 கோடிக்கு பரிவர்த்தனை நடைபெற்றதாக 3 இளைஞர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.


திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே குமாரராஜ பேட்டை ஊராட்சியில் ஐந்து இளைஞர்கள் வீடுகளில் டெல்லியில் இருந்து வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அதிரடி சோதனை வங்கி கணக்குகளில் 2 கோடி பரிவர்த்தனை நடந்தது எப்படி என்று இளைஞர்களிடம் கிடுக்கு பிடி விசாரணை.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜா பேட்டை. ஊராட்சியில் உள்ள  இளைஞர்கள் பிரகாஷ், அரவிந்தன், தமிழரசன், மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் டெல்லியில் இருந்து வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 பேர் மேற்கண்ட வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் இரு சக்கர வாகனம் மற்றும் அவர்கள் வீடுகளில் உள்ள உறவினர்கள் வீடுகள் போன்றவற்றிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் இந்த அதிரடி சோதனையின் போது சி.ஆர்.பி.எப்  துப்பாக்கி ஏந்திய போலீசார் 15-க்கும் மேற்பட்டோர், இந்த அதிரடி சோதனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கண்ட இளைஞர்கள் வங்கி கணக்குகளில் 2 கோடி ரூபாய் வங்கி பரிவர்த்தனை நடந்துள்ளது என்றும் இதுகுறித்து இளைஞர்களிடம் கெடுக்கு பிடி விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது, அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு மணி நேரமாக இந்த விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்..

No comments

Copying is disabled on this page!