கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு மாவட்ட குழந்தைகள்நல அலுவலர் அலெக்ஸ் வாழ்த்து.
கோவையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களை மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
தென்னிந்திய அளவிலான மட்சுமா கராத்தே போட்டி கோவை மாவட்டம் சூலூர் அருகே அருள்மிகு அங்காள அம்மன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தூத்துக்குடி ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசுகளை வென்று சாதனை படைத்தனர்.
அவர்களில் செயின்ட் மேரிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதேஷ், பென் நர்சரி பிரைமரி பள்ளி மாணவர் ஜெஸ்வின்சாம், சுப்பையா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவி அஞ்சனி ஆகியோர் முதல் பரிசும், பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் தருண் தங்கராஜ், ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருஷ்டியானா வில்லியம்ஸ், சுப்பையா வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவி சோபியா, செயின்ட் அன்னாள் மேல்நிலைப்பள்ளி மாணவி மகராசி சாரா, கெத்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் க்ளாரன் ஆகியோர் இரண்டாம் பரிசுகளையும், பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ரேவந்த், பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் ராம்பிரகாஷ் ஆகியோர் மூன்றாம் பரிசினையும் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற கராத்தே வீரர்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் மாணவர்களை பாராட்டி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். திறமையான மாணவர்களை உருவாக்கியதற்காக ஈஸி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் இம்மானுவேலுக்கு தமிழ்நாடு மட்சுமா கராத்தே அமைப்பு சார்பாக சிறந்த பயிற்சியாளருக்கான நினைவு பரிசு கோப்பை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் பெற்றோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments