உடன்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள கிழக்கத்தியார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் தொழிலதிபர் நடராஜன் 200பேருக்கு சேலை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சுப்பிரமணியபுரத்தில் கிழக்கத்தியார் சுவாமி கோயில் உள்ளது. பழையான இந்த கோவிலில் பக்தர்கள் நிதியுதவியுடன் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி 2நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்தன. இன்று காலை 7.35 மணிக்கு மேல் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் காயாமொழி மண்ணின் மைந்தரும், தஞ்சை தேவி இன்னோ வெஞ்சர் (எல்எல்பி) நிறுவன சேர்மேனுமான வி.எஸ்.நடராஜன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். தொழிலதிபர் வி. எஸ். நடராஜன் 200 பே ருக்கு சேலை வழங்கினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை கும்பாபிஷேக குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்திருந்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments