Breaking News

திருவள்ளூரில் நிறைந்த மது போதையில் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த அரசு மருத்துவர்.


திருவள்ளூர் மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 5 மாடிகள் கொண்டதும் 500 படுக்கைகளுடனும் அதி நவீன சிகிச்சை வசதியுடன் கூடிய மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பொது மருத்துவர் நல்லதம்பி குடிபோதையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வந்தவர்களிடம் ஒருமையில் பேசி தகராறில்  ஈடுபட்டதாக கூறப்படும் வீடியோவானது திருவள்ளூர் பகுதியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மருத்துவர் மது போதையில் தகராறு ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் இது குறித்து திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் ரேவதி இடம் விளக்கம் கேட்டபோது அலட்சியமாக பதில் கூறினார், மேலும் அந்த விளக்கத்தில் வீடியோ பார்த்தேன் நல்லா இருந்தது நான் ஏற்கனவே பார்த்த வீடியோ வேற மாதிரியா இருந்தது இந்த வீடியோ நல்லா இருக்கு மருத்துவர் மீது விசாரணை மேற்கொண்டு துறை ரீதியான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என அலட்சியமாக பதில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனைகளில் பணியாற்றும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஆண் மருத்துவர் குடிபோதையில் நோயாளிகளை ஒருரமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது மருத்துவமனையில் பணியாற்றம் பெண் நோயாளிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

மேலும் மருத்துவமனையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய மருத்துவமனையின் டீன் ஆண் மருத்துவரின் செயலுக்கு அலட்சியமாக பதில் கூறியுள்ளது பெண் மருத்துவர்கள் மட்டுமில்லாது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

No comments

Copying is disabled on this page!