காரைக்காலில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி நாக.தியாகராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்காலில் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி. வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மராத்தான் போட்டியை நிரவி திருப்பட்டினம் திமுக சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டி BNI சார்பில் நடைபெற்றது.
5 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்ற இம்மராத்தான் போட்டியில் 600 க்கும் மேற்பட்டோர் பங்கேற்று காமராஜர் சாலை,P.K.சாலை, பாரதியார் சாலை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க தொகை மற்றும் சான்றிதழ்களை திமுக சட்டமன்ற உறுப்பினர் நாக.தியாகராஜன் வழங்கினர்.
ர்.
No comments