அறிஞர் அண்ணா கல்லூரியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்.
மனித சமூகத்தைச் சீர்கெடுப்பதில் போதைப்பொருள் உபயோகம் முதலிடம் வகிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு மனித அறிவை மழுங்கச் செய்து சிந்திக்கும் திறனை அழித்து குடும்பம், சமூகத்தை தவறான பாதையில் இழுத்துச் சென்று விடும். போதைப்பொருளை முற்றிலுமாக தவிா்ப்போம்.
மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றுள் மிக முக்கியமான ஒன்று போதைப் பழக்கம் ஆகும். போதைப் பொருள்களால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீா்குலைகிறது என்றார் மேலும், போதைப்பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! மது குடிக்காதே, கஞ்சா புகைக்காதே, போதைப்பொருளை எடுத்துக் கொள்ளாதே என விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பேசி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிறப்பு விருந்தினராக குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் திரு A. செந்தில் குமார் அவர்களும் திரு M. சரவணன் (SB-CID) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் வேதியியல் துறைத் தலைவர் திரு. இரா .சிவகுமார், வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் மா.ஜெகன் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அ. மாணிக்கம் உட்பட அனைத்து துறை பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று போதைப் பொருள் உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
விழாவின் நிறைவாக கல்லூரியின் வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியர் திரு.ம. சந்தோஷ் குமார் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவு பெற்றது.
No comments