Breaking News

ஒதியம்பட்டில் ரூ. ஒரு கோடி மதிப்பில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தொடங்கி வைத்தார்!


புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன் ஒதியம்பட்டு வருவாய் கிராமத்தில் பள்ளிவாசலில் இருந்து கருப்பட்டி வாய்க்கால் கான்கிரீட் சுவர்களுடன் கூடியவடிகால் வாய்க்கால் அமைக்க பொதுப்பணித்துறை நீர்பாசனக் கோட்டம் மூலம் ரூபாய்  ஒரு கோடி நிதி ஒதுக்கப்பட்டு அப்பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று நடந்தது. 

இதில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா  கலந்துகொண்டு, வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் டாக்டர்  தீனாதயாளன், கண்காணிப்பு பொறியாளர் வீரசெல்வம், நீர்ப்பாசன  கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் சங்கர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள்  லத்திப், கமல்பாஷா, செல்வநாயகம், கதிரவன்,  ஜெகன்மோகன், சேகர், ஜனா, லூர்துநாதன், அசாரு, யூனஸ், ஜாகீர், பஷீர் அகமது, ஜலால், முகமது ஜானி பாஷா, சபீபுல்லா, நஜிபுதின், ரஷீத், கலீல், அஷ்ரப் அலி, அபிபு ரகுமான், முகமது அலி, நூர் முகமது மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் செல்வநாதன், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குலசேகரன், தொழிலாளர் முன்னேற்ற பேரவை சங்க தலைவர் அங்காளன், ஆதிதிராவிட அணி துணை அமைப்பாளர் காளி, தொகுதி துணைச் செயலாளர் அரிகிருஷ்ணன், தொகுதி செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ராஜி, ரமேஷ், சுரேஷ், ராஜேந்திரன், வஜ்ரவேலு, முருகையன், பாலு, அன்பு, அஞ்சாப்புலி, வெங்கடேசன், நாகராஜ், ராஜேஷ், முருகேசன், பவித்ரன், முத்து, அபிமன்னன், ராஜா ராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments

Copying is disabled on this page!