குடியாத்தம் ராஜா குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் தெரு விளக்கு கோபி ஜனாதிபதியிடம் விருது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜா குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தெருவிளக்கு கோபி இவர் மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர் என்றும் கூறப்படுகிறது இவர் தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடத்தினை கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொண்டு பாடத்தை கற்பிப்பதில் வல்லவர் என்று அவருடன் பணிபுரியும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
இவர் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர் இவர் தன்னுடைய பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கும் அவரவர் படிப்பின் திறனை கொண்டு எந்த எந்த துறையின் படிப்பினை தேர்வு செய்வது போன்ற அறிவுரைகளை எல்லாம் மாணவர்களுக்கு கூறுவதாகவும் மேலும் இவர் தேர்வு செய்து கொடுக்கும் படிப்பினை ஏராளமான மாணவர்கள் பயின்று தற்போது பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
எனவே பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஆசிரியர் தெரு விளக்கு கோபி அவர்களை தேசிய நல்லாசிரியர் விருதுக்காக சிபாரிசு செய்தது இந்த விருதானது இந்தியாவில் மொத்தம் 50 பேர் என தேர்வு செய்யப்பட்டிருந்தது இதில் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டு பேர் ஒருவர் மதுரை சார்ந்த ஆசிரியர் மற்றொரு ஆசிரியர் குடியாத்தம் தெரு விளக்கு ஆசிரியர் கோபி ஆவார் எனவே அவரை நேரில் அழைத்து இந்திய குடியரசு தலைவர் ஆசிரியர் கோபிக்கு விருதினை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments