மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணம் திருட்டு.
மயிலாடுதுறை அருகே மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகைகள், பணத்தை திருடி சென்றது தொடர்பாக குத்தாலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மூவலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்.44. மல்லியம் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவர் இன்று வேலைக்கு சென்று இருந்த நிலையில் இவரது மனைவி வளர்மதி.40. மதியம் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள பள்ளியில் பயிலும் தனது மகனுக்கு சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். 1:30 மணி அளவில் வீடு திரும்பிய வளர்மதி வீட்டில் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகளும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 10,000 பணத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது தகவல் அறிந்த மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்ததுடன் சம்பவம் குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
No comments