மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5சவரன் நகை, 10000ரொக்க பணம் திருட்டு
மீஞ்சூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5சவரன் நகை, 10000ரொக்க பணம் திருட்டு. வீட்டின் உரிமையாளர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்த போதே பூட்டை உடைத்து துணிகரம். அருகில் உள்ள 2கோவில்களில் உண்டியல் உடைப்பு.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பத்மாவதி நகர் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநரான பாலசிங் தமது மனைவி ஜான்சி மற்றும் 2குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று குடும்பத்துடன் இவர் வீட்டின் படுக்கையறையில் தூங்கி விட்டு இன்று அதிகாலை கண்விழித்து பார்த்தபோது வீட்டின் முக்கிய கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அப்போது மற்றொரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5சவரன் தங்க நகைகள், 10000 ரொக்க பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இதே போல அருகில் உள்ள சாய்பாபா கோவில், விநாயகர் கோவில்களின் உண்டியலை உடைத்தும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments