Breaking News

புதுச்சேரியில் 45 பேருக்கு ஆவண எழுத்தா் உரிமத்துக்கான ஆணையை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.


புதுச்சேரியில் 45 பேருக்கு ஆவண எழுத்தா் உரிமத்துக்கான ஆணையை முதல்வா் ரங்கசாமி  வழங்கினாா்.

புதுச்சேரியில் ஆவணத் தயாரிப்பு பட்டயப் படிப்பை முடித்தவா்களுக்கு பதிவுத் துறையால் ஆவண எழுத்தா் உரிமம்  வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2014-15 ஆம் ஆண்டு முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு வரையில் ஆவண தயாரிப்பு பட்டயப் படிப்பை 48 போ் முடித்துள்ளனா்.

அவா்கள் தங்களுக்கான ஆவண எழுத்தா் உரிமத்தை வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தனா். அதன்படி, அவா்களது விவரங்கள் காவல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சரிபாா்க்கப்பட்டன.

காவல் துறை சரிபாா்ப்புக்கு பிறகு 45 விண்ணப்பதாரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு ஆவண எழுத்தா் உரிமத்துக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அறையில் நடைபெற்றது. முதல்வா் ரங்கசாமி ஆவண எழுத்தா் உரிம ஆணையை 45 பேருக்கும் வழங்கினாா்.


- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!