கொல்கத்தாவில் மருத்துவ பயிற்சி மாணவி கொடூரமாக கொலை செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காயல்பட்டிணத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடந்தது.
மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவில் முதுகலை பெண் பயிற்சி மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் பேரணிகள் நடந்து வருகிறது.
கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க கோரியும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டிணம் வாவு வஜ்ரயா வனிதையர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கே.என்.பி.மருத்துவமனையும் இணைந்து பேரணி நடத்தினர்.
இதில் கல்லூரி மாணவிகள், மருத்துவமனை மருத்துவர்கள் என 450க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி காயல்பட்டிணம் பேருந்து நிலையம் முன்பு தொடங்கி கே.என்.பி. மருத்துவமனை முன்பு நிறைவடைந்தது. இதில் கலந்து கொண்ட மாணவிகள் கையில் கோரிக்கைகள் குறித்த பதாகையுடன் கோரிக்கைகள் குறித்து கோஷமிட்டபடி பேரணியாக வந்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments