கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ஆட்சியரகப் பகுதியில் தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்.
கொல்கத்தா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இச் சம்பவத்தை கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
அப்போது இக்சம்பவத்தினைக் கண்டித்தும், குற்றவாளிகளை தூக்கிலிடவும், நாடு முழுவதும் பெண் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுத்து நிறுத்திடவேண்டும் என கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments