உளுந்தூர்பேட்டை அருகே சேர்ந்த நாட்டில் திமுக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் திமுக திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் சேர்ந்த நாட்டில் ஒன்றிய செயலாளர் வசந்தவேல் அவர்கள் தலைமையில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான உதயசூரியன் அவர்கள் கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருநாவலூர் சேர்மன் சாந்தி இளங்கோவன், அவைத்தலைவர் கண்ணன், துணைச் செயலாளர்கள் குணசேகர சுந்தரி, ஜெயபால், முருகன், பொருளாளர் பாஸ்கர், மாவட்ட பிரதிநிதிகள் மதிவாணன், வீரப்பன், ராமச்சந்திரன், ஏழுமலை ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ,முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர் மேலும் திமுக உறுப்பினர் அட்டை திருநாவலூர் ஒன்றியற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.
No comments