நாட்றம்பள்ளி பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்எல்ஏ பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் இன்று திம்மாம்பேட்டை AN திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி புதிய உறுப்பினர்கள் அட்டை மற்றும் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் தென்திசையின் தீர்ப்பு 40/40 நூல்களை வழங்கினார். நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.சாமுடி அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மஞ்சுளா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
No comments