Breaking News

மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மொழிப்போர் தியாகி டாக்டர் காசூர் ஜெகதீசன் ஏற்பாட்டில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி ஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் பேசுகையில் மீஞ்சூர் தெற்கு ஒன்றியத்தில் மறைந்த திமுக நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்தனர் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் நகர பேரூர் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் கழக மூத்த முன்னோடிகள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!