Breaking News

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான தடகள போட்டி காட்டுச்சேரியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்ட அளவிலான தடகள போட்டி  காட்டுச்சேரியில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. மாவட்ட அளவிலான  இரண்டு நாட்கள் நடைபெறும் போட்டிகளில் 230 பள்ளிகளைச் சேர்ந்த 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு  இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள சிறு விளையாட்டு அரங்கத்தில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றது இரண்டு நாட்கள் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உமாநாத் முன்னிலை வகித்தார். சங்கரன்பந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குனர் பிரபாகர் வரவேற்றார். 

மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள போட்டியில்  230 பள்ளிகளை சேர்ந்த சுமார் 680 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் என மொத்தம் 86 தடகள போட்டிகள்  நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ மாணவிகள் சான்றிதழ் வழங்கப்பட்டு மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெறுவார்கள். 

 நிகழ்ச்சியில் திமுக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், திமுக செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார், செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், திமுக தரங்கம்பாடி நகர செயலாளர் முத்துராஜா, ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி சாமிநாதன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துக் கணியன் மற்றும் உடற்கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் பங்கேற்றனர். செம்பனார்கோயில் சம்பந்தம் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் செல்வ கணேசன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இந்த மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்று விளையாடினர் இந்த போட்டியில் வெற்றி பெற்று இரண்டு இடங்களை பெறும் மாணவ மாணவிகள் அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!