புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அனைத்து விளையாட்டு சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் அனைத்து விளையாட்டு சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்க மூலம் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அலுவலகத்திற்கு புதிய கம்ப்யூட்டர் ஒன்று அளிக்கப்பட்டது. மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.செந்தில்குமார் ஐயா அவர்களிடம் புதிய கம்ப்யூட்டர் புதுக்கோட்டை மாவட்ட கிக் பாக்ஸிங் சங்கத்தின் மூலம் வழங்கப்பட்டது.
இதில் விளையாட்டு அலுவலர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட கிக் பாக்சிங் சங்க செயலாளர் பிரவீன் குமார் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து இதர சங்கங்கள் பயிற்சியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கிக் பாக்ஸிங் சங்க செயலாளர் மற்றும் பயிற்சியாளர்களை பாராட்டினார்கள்.
No comments