உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற பெயரை மாற்றி இளைய தலைவர் இளம் தலைவர் என சுவர் விளம்பரங்களில் எழுதுவதாக இருந்தாலும் எழுத வேண்டும் - திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு.
உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற பெயரை மாற்றி இளைய தலைவர் இளம் தலைவர் என சுவர் விளம்பரங்களில் எழுதுவதாக இருந்தாலும் எழுத வேண்டும் என்று திமுக செம்பனார்கோயில் மத்திய ஒன்றியம் சார்பில் திருக்கடையூரில் நடைபெற்ற முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூர் சன்னதி வீதியில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றியம் சார்பில் செம்பனார்கோவில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில் ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி கல்வி உதவித்தொகையை நிறுத்தி வைத்துள்ளார், இதுவரை வெள்ளத்திற்கான எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை வாய் கிழிய பேசிக்கொண்டு தமிழகத்தை புறக்கணித்துக் கொண்டிருக்கிறார்கள், எந்த நிதியுதவி வழங்காவிட்டாலும் தமிழகத்தில் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருப்பவர் மு க ஸ்டாலின் எனவும் இனிமேல் உதயநிதி ஸ்டாலினை எல்லோரும் சுவர் விளம்பரத்தில் எழுதுவதாக இருந்தாலும் சின்னவர் என்ற பெயரை மாற்றி இளைய தலைவர் இளம் தலைவர் என்று எழுத வேண்டுமென கொள்கை பரப்புச் செயலாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்வதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியின் முடிவில் டி மணல்மேடு கிராமத்திலிருந்து 50-க்கு மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தலைமையில் செம்பனார்கோவில் மத்திய ஒன்றிய செயலாளர் அமுர்த விஜயகுமார் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் திமுக நிர்வாகி சுரேஷ் ஏற்பாட்டில் 50க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். இதில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments