பொன்னேரி அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் தீமிதி விழாவில் பக்தர்கள் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சி பாரதி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு தீமிதி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.
கிராம தேவதை ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி கடந்த பத்து நாட்களாக விரதம் இருந்து பக்தியுடன் கரகம் தீச்சட்டி ஏந்தியும் தீ மிதித்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி முதல் தடவையாக தமது கிராமத்தில் இளைஞர்கள் உள்ள எல்லையம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் விதத்தில் பக்தியுடன் தீ மிதித்தனர்.
இதில் பொன்னேரி, பழவேற்காடு, மீஞ்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லையம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பாரதிநகர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
No comments