நூதன முறையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய திருநெல்வேலி தென்பத்து, சொக்கட்டான் தோப்பு கிராம மாணவர்கள்.
விநாயகர் சிலைகளை களிமண்ணில் செய்து அதில் மரவிதைகளை பதித்து குன்னத்தூர் சாலையின் ஓரத்தில் அப்படியே வைத்து விட்டனர்.. மழையில் நனைந்து தாமாகவே மரம் வளர்ந்து விடும். இந்த நோட்டில் மரம் வளர்ப்போம் நாட்டை காப்போம் என்று கோசத்தில் எழுப்பி ஆன்மீகம் கலந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் இவர்கள் செய்யப்பட்டனர்.
தென்னை மட்டையில் மாட்டுவண்டி செய்து ஊர்வலமாக மேளதாளத்துடன் சென்று சாலை ஓரங்களில் இந்தப் களிமண் ஆள் செய்த பிள்ளையாரை வைத்துவிட்டு பிள்ளையாரை வழிபட்டு சென்று விட்டனர் அடுத்த மாதம் தென்மேற்கு பருவக்காற்று மழையால் இந்த விதைகள் மண்ணோடு மண்ணாக கலந்து மரமாக வளரும் என்ற நோக்கில் இவர்கள் செயல்பட்டனர், விளையாட்டாக இவர்கள் செய்வது கூட ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது
No comments