கேத்தாண்டபட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை திவான் முகமது பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா கேத்தாண்டபட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை திவான் முகமது மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 1990 முதல் 2003 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னிலை கூட்டுறவு சர்க்கரை ஆலை திருமண மண்டபத்தில் நேற்று காலை 11 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் பள்ளி தலைமை ஆசிரியரும் மாவட்ட கல்வி இடைநிலை பள்ளிக்கல்வி அலுவலர் சி. தன்ராஜ் முன்னாள் தலைமை ஆசிரியர் கமலாம்பாள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்து சிறப்பித்தனர்.
மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் மத்திய விருந்தளித்து முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்ட அனைவருக்கும் முன்னாள் மாணவர்கள் சிறப்பு விருந்தினர்கள் ஆசிரியர் பெருமக்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்து சிறப்பித்தனர்.
No comments