மலேசியா நாட்டில் நடைபெற்ற உலக சைவ நன்னெறி மாநாட்டில் பங்கேற்ற தருமபுரம் ஆதீன மடாதிபதி விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
மலேசியாவில் உலக சைவ நன்னெறி மாநாடு நடைபெற்றது இதில் பங்கேற்பதற்காக ஒரு நாள் பயணமாக தருமபுரம் ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் விமானம் மூலம் மலேசியா சென்றார். அவருக்கு மலேசியாவில் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து பத்துமலை முருகன் கோயிலில் நடைபெற்ற நன்னெறி மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மலேசியா மகாமாரியம்மன் தேவஸ்தானம் தலைவர் டான்ஶ்ரீ டக்தோ டாக்டர் நட்ராஜ் உள்ளிட்ட பலருக்கு ஆன்மிக அறப்பணிச் செம்மல் விருது வழங்கினார்.
No comments