டிஜிட்டல் கிராஃப் சர்வே பணிக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
டிஜிட்டல் கிராஃப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில் இன்று மாலை தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டத் தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண்துறை பணியான டிஜிட்டல் கிராப் சர்வே பணியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணித்த வருவாய் நிர்வாகத்தை கண்டித்தும், டிஜிட்டல் கிராப் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமித்திடவும், டிஜிட்டல் கிராஃப் பணிக்கு உபகரணங்களை வழங்கிட வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments