ஏனாமில் சட்ட விரோதமாக செயல்படும் சூதாட்ட விடுதிகளை மூடக்கோரி ஆர்.எல்.வி ஜனநாயக பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஆரதடி பசியா,யானம் நிர்வாக அலுவலர் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி பிராந்தியமான ஏனாமில் சில வருடங்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், சட்டவிரோதமாகவும் சூதாட்ட விடுதிகள் செயல்படுவதாக அந்த புகாரை தொடர்ந்து அதிரடியாக சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் ஏனாம் எல்லை மற்றும் நகரப் பகுதியில் மீண்டும் சூதாட்ட விடுதிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனிடையே ஆர்.எல்.வி ஜனநாயக பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஆரதடி பசியா யானம் நிர்வாக அலுவலர் முனுசாமி, நகராட்சி ஆணையர் கந்தவல்லி ராமகிருஷ்ணா, காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, சூதாட்டம் விடுதிகளை மூடக்கோரி புகார் மனு அளித்துள்ளார்.
No comments