பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி நூதன போராட்டம்.
திருச்செந்தூர் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டி 500 அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டு மதுரை கோட்ட பொறியாளருக்கு அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து பாலக்காடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா காலத்திற்கு முன்பு பிறகு அந்த ரயில் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என்று ரயில் நிர்வாகம் அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் மழை வெள்ளத்தில் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகளை பாதுகாத்ததற்காக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
ஆனால் தாதன்குளம் மற்றும் செய்துங்கநல்லூரில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு தொடர்ந்தது. இந்த நிலையில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வலியுறுத்தி செய்துங்கநல்லூரைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக திருச்செந்தூர் பாலக்காடு ரயில் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரை கோட்டப்பொறியாளருக்கு 500 அஞ்சல் அட்டைகளை செய்துங்கநல்லூர் தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த வியாபாரிகள் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் தபால் அலுவலகத்திற்கு வந்த பெண்கள் உள்பட பலர் கலந்து அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டு கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments