டிஜிட்டல் கிராஃப்ட் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமிக்க வலியுறுத்தி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டச் செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேளாண்துறை பணியான டிஜிட்டல் கிராப் சர்வீஸ் பணியினை கிராம நிர்வாக அலுவலர்கள் மீது திணித்தல், டிஜிட்டல் சர்வே பணிக்கு பிற மாநிலங்களைப் போல கூடுதல் பணியாளர்களை நியமித்தல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் உதயகுமார் மாவட்ட அமைப்புச் செயலாளர் பார்த்திபன் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
No comments