பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத் துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சேதமடைந்த கூரைமேல் விரிக்கும் தார்பாய்கள், துப்புரவு பணியாளர்களுக்கு புடவைகள், சலவை தொழிலாளி ஒருவருக்கு இஸ்திரி பெட்டி, விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் உடைகள், திருநள்ளாறு அரசு மருத்துவமனைக்கு குப்பை தொட்டிகள், மா, பலா, மகாகனி, தேக்கு உள்ளிட்ட மர வகைகள் என ஒரு லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு கடைவீதியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் திருநள்ளாறு பாஜக சார்பில் புதுச்சேரி மாநில துணைத்தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் ஏற்பாட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நீடூடி வாழ சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திருநள்ளாறு தொகுதி தலைவர் ஆறுமுகம், பொதுச்செயலாளர் ஜெயசிம்மன், ராஜவேலு பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் "பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த பிறந்தநாளை ஒட்டி 17ஆம் (இன்று) தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை சேவை வரமாக கொண்டாட உள்ளதால் மாவட்டம் முழுவதும் பல்வேறு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments