மிஷன் 2050 என்ற திட்டத்தின் கீழ் 2047 ஆம் ஆண்டுக்குள் டிரைவர் இல்லாமல் 4500 வந்தே பாரத் டிரெயின்கள் இயக்க மத்திய அரசு முடிவு - எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டு.
மயிலாடுதுறையில் ரயில்வே தனியார் மையம் குறித்தும் தொழிற்சங்க அங்கீகார தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் எஸ்ஆர்எம் யூ தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்றது. திருச்சி கோட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எஸ் ஆர் எம் யூ தெற்கு ரயில்வே மண்டல தலைவர் ராஜா ஸ்ரீதர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசும்போது மத்திய அரசு படிப்படியாக ரயில்வே ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தனியார் மயமாக்கும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது மிஷன் 2050 என்ற பெயரில் பல திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன அதில் ஒன்றாக 2047 ஆம் ஆண்டுக்குள் 4500 வந்தே பாரத் ரயில்களை லோகோ பைலட் எனப்படும் என்ஜின் டிரைவர்கள் இல்லாமல் இயக்க முடிவு செய்துள்ளது. இதனால் என்ஜின் டிரைவர்கள் மற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்கள் வேலை இழக்கும் வாய்ப்புள்ளது இதனை எதிர்த்து போராட வேண்டி உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறும் பொழுது 1927 ஆம் ஆண்டு பென்சனுக்காக போராடிய தொழிற்சங்கம் எஸ் ஆர் எம் யூ ரயில்வேயில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய போராடி வருகிறோம். 2002 ஆம் ஆண்டு முதல் ரயில்வேயை கூறு போட மத்திய அரசு நினைத்தது ஆனாலும் அதனையும் தடுத்து இருக்கிறோம் தொடர்ந்து தொழிலாளர்களுக்கான உரிமையை ரயில்வே நிர்வாகம் பறிப்பதை தடுத்து வருகிறோம். என்று தெரிவித்தார்.
No comments