உளுந்தூர்பேட்டையில் வி.சி.க-வின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளக் கூடாது - என மனு.
உளுந்தூர்பேட்டையில் வி.சி.க கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாசன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டிற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாசன் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அதில் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் நினைத்தால் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முடியும் அதை விட்டுவிட்டு மது ஒழிப்பு மாநாட்டில் அவர்கள் கலந்து கொள்வது போலியான ஒரு மாநாட்டை நடத்துவது போல காட்சி அளிக்கிறது எனவே இந்த மாநாட்டில் திமுக கலந்து கொண்டால் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். அந்த மாநாட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வருவதை நாங்கள் வரவேற்கிறோம் ஆனால் ஆளுகின்ற திமுகவோ அல்லது இதற்கு முன்னர் ஆண்ட அதிமுகவோ இந்த மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது.
நான் இதுவரை 60 முறைக்கு மேல் இந்த மது ஒழிப்பிற்காக போராடி சிறை சென்றுள்ளேன் எங்கள் மது மற்றும் போதை ஒழிப்பு மக்கள் நல கூட்டமைப்பு சார்பில் போராடியவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை சிறை சென்றுள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியது போல விடுதலை சிறுத்தைகள் கட்சி இதில் எல்கேஜி தான்.
நாங்கள் இந்த கொள்கைக்காக போராடியதில் பி ஹெச் டி. மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொண்டால் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகே கட்டாயம் அவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments