சீர்காழி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்.
திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல். ஐ.லியோனி கலந்துகொண்டு பேசுகையில், 2016 இல் மக்கள் நல கூட்டணி என்று ஒரு கூட்டணி அமைத்து அதிமுக, மக்கள் நல கூட்டணி, திமுக என போட்டியிட்டு வந்தார்கள்.மக்கள் நல கூட்டணியில் இருந்த தலைவர்களை எல்லாம் 2017 -18 இல் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது அனுகுமுறையால் அழைத்து தமிழகத்தில் வெல்ல முடியாத ஒரு கூட்டணியை அமைத்தவர் தலைவர் ஸ்டாலின் ஆவார்.
இந்தியாவிற்கே கூட்டணி அமைத்து கொடுத்த தலைவர் ஸ்டாலின்தான். மகளிர் உரிமைத் தொகை, மகளிருக்கு இலவச விடியல் பேருந்து ஆகியவற்றை வழங்கி ஒரு பெண்ணை பொருளாதாரத்தில் சுதந்திரமாக நிற்க வைத்த ஆட்சி திமுக ஆட்சி. கலைஞர் போன்று நூற்றாண்டு விழா உலகத்தில் வேறு எந்த தலைவருக்கும் கொண்டாடப்படவில்லை என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே பரப் கூறியுள்ளார். கூட்டணியில் உள்ள தலைவர் தொல். திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார்.
உடனே ஊடகம் மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் ஏன் நடத்துகிறார் என்றால் அவர் அதிமுக கூட்டணிக்கு செல்ல தயாராகி விட்டார் என விவாதங்களை நடத்துகின்றன. இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பதை போல் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்து, இதற்கும் கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை நாங்கள் மக்கள் சக்தியாக இருந்து மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறோம்.
திமுகவில் இருந்து யாரேனும் இரண்டு பேரை பேசுவதற்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டார். கூட்டணியை எப்படியேனும் உடைக்க வேண்டும் என சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்த கூட்டணியை எவராலும் சிதைக்க முடியாது, அழிக்கவும் முடியாது என்றார்.
No comments