Breaking News

மணலூர்பேட்டையில் திமுக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் தெற்கு மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, மணலூர்பேட்டை  பேரூர் திராவிட முன்னேற்ற கழக பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று காலை ஸ்ரீ மங்கள விநாயகர்  திருமண மண்டபத்தில், அவைத் தலைவர் மாணிக்கம் தலைமையில், செயலாளர் ஜெய்கணேஷ்  முன்னிலையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில், கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வருகின்ற 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் எவ்வாறு திறம்பட ஆக்கப் பணிகள் செய்திட வேண்டும் என்பது குறித்தும், சார்பு அணிகளின் நிர்வாகிகள் தங்களது பகுதியில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும், திமுக முப்பெரும் விழாவில் மணலூர்பேட்டை திமுக  சார்பில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனவும் சிறப்புரையாற்றி, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகளுக்கு நன்றிகளைத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.


இந்த நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, பேரூராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், மணலூர்பேட்டை பேரூர் கழகத்திற்கு உட்பட்ட மாவட்ட, பேரூர், வார்டு நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!