Breaking News

திருக்கடையூரில் தேசிய முற்போக்கு திராவிட கழக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் சன்னதி தெருவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செப்டம்பர் 14 கழகத்தின் துவக்க நாளை முன்னிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் இருபதாம் ஆண்டு விழா மற்றும் மறைந்த பத்மபூஷன் கேப்டன் 72 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாவாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாகவும் நடைபெற்றது தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ஜலபதி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேமுதிக செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார், தேமுதிக மாவட்ட அவை தலைவரும் பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே எஸ் கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் ராசி மதிவாணன், மாவட்ட துணை செயலாளர் சாரங்கபாணி, மாவட்ட துணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் சிடி பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் கனிமொழி, செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜா, தரங்கை பேரூராட்சி செயலாளர் முத்தழகன், மாநில செயற்குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுபாஷ்சந்திரபோஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் அப்துல் முனாப், மாநில பொது குழு உறுப்பினர் செல்வம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் கலாநிதி, முன்னாள் மாவட்ட கழக துணை செயலாளர் ரவீந்திரன், மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர் பிபி நல்லூர் ராஜா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேமுதிக கழக இளைஞரணி துணை செயலாளர் பாலமுருகன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். 


மேலும் தேமுதிக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தேமுதிக ஊராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இறுதியில் மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி உரையாற்றினார். முன்னதாக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த கழக இளைஞரணி துணை செயலாளர் பாலமுருகனுக்கு தேமுதிக மாவட்ட அவை தலைவரும் பரசலூர் ஒன்றிய கவுன்சிலருமான கே எஸ் கிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!