ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சைபர் குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமின்றி பொதுமக்கள் சைபர் குற்றங்களில் சிக்காமல் விழித்துக் கொள்ள பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வாறு குற்றம் சம்பவங்களை தடுக்காலம் என, பெண் ஒருவர் டிப்டாப் உடை அணிந்து பேசும் வீடியோ ஒன்றை சைபர் கிரைம் போலீசார் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் கூரியர் மூலமாக போதைபொருட்கள், ஆயுதங்கள் அனுப்பியதாகவும், சிம்கார்டுகள், ஏ.டி.எம்., கார்டுகள் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளதாகவும், மும்பை போலீசார், போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் பேசுவதாக கூறி மிரட்டி ஆன்லைன் மோசடி பணத்தை பறிக்கிறார்கள். அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் எந்தவொரு வீடியோ அழைப்பையும் ஏற்க வேண்டாம் உள்ளிட்ட தகவல்கள் அந்த வீடியோவில் வெளியாகி உள்ளது.
No comments